தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chance Of Moderate Rain In Tamil Nadu From Tomorrow Till 1st

அப்பாடா! வெயிலுக்கு குட்டி பிரேக்.. நாளை முதல் மழை.. எங்கு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Feb 26, 2023 03:06 PM IST

Today Weather Update : தமிழகத்தில் நாளை முதல் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை - கோப்புபடம்
மழை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து நாளை (பிப்.27) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், மார்ச் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்