Tamil News  /  Tamilnadu  /  Cell Phone Ban In Tiruchendur Temple
திருச்செந்தூர் முருகன் கோயில்- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
திருச்செந்தூர் முருகன் கோயில்- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு இனி அனுமதியில்லை

09 November 2022, 23:30 ISTI Jayachandran
09 November 2022, 23:30 IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர்கள் உள்பட அனைவரும் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன்களைப் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிமன்றம் விதித்த உத்தரவு விவரம்:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர்கள் உளஅபட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக இந்து அறநிலையத்துறை ஆணையர் தடை விதிக்க வேண்டும்.

கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோயில்களில் நாகரிகமான உடைகளை அணிவது அவசியம், டிஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட், லெங்கிங்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமென்றாலும் தன்னிஷ்டம் போல் செய்து கொள்ளலாம், நடந்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் ஒன்றும் சத்திரங்கள் அல்ல.

திருப்பதி திருமலை கோயில் வாசலின் முன்பு புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. தமிழகத்தில் சாமி சிலைகள் உற்சவம் வரும்போது சகஜமாக மக்கள் செல்பி எடுக்கின்றதைப் பார்க்க முடிகிறது. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்