Case Registered against Annamalai: தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் புகார்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
BJP Candidate Annamalai: தேர்தல் பறக்கும் படை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர், சூலூர் போலீஸார் அண்ணாமலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கோவையில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு எதிராக சிங்காநல்லூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சூலூர் போலீசார் அண்ணாமலை மற்றும் 300 பேர் மீது 143, 341 ஆகிய இரு பிரிவுகளிலும், சிங்காநல்லூர் போலீசார் 143, 286, 341, 290 IPC ஆகிய நான்கு பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில் சூலூர் போலீஸாரும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தமிழக பாஜக தலைவரும், பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை விதிகளை மீறி பிரசாரம் செய்வதை கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாக திமுக நிர்வாகிகள் புகார் கூறியிருந்தனர்.
தேர்தல் விதிகளை மீறி அண்ணாமலை மற்றும் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது எனவும் திமுகவினர் புகார் எழுப்பினர்.
போலீசார் தடுத்தும் அத்துமீறி இரவு 10 மணிக்கு மேல் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்ததாகவும் அதைத் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர், சூலூர் போலீஸார் அண்ணாமலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளின் படி இரவு 10 மணிக்கு மேல் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதனிடையே, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாடு ஒரு முக்கியமான கோட்டையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சியால் மாநிலத்தில் கட்சியை நிலைநிறுத்த பாஜகவின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தக் கூட்டணி அதிக ஆதரவைப் பெற்றுள்ளதாக கருத்துக் கணக்கில் தெரியவந்துள்ளது.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராக I.N.D.I.A கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. இத்தேர்தலில் தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலமாக அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் பாஜகவும் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சூறாவளிப் பிரசாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன.

டாபிக்ஸ்