கோவை விமான நிலையத்தில் அனுமதியின்றி கூட்டம்! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோவை விமான நிலையத்தில் அனுமதியின்றி கூட்டம்! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கோவை விமான நிலையத்தில் அனுமதியின்றி கூட்டம்! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

Kathiravan V HT Tamil
Published Apr 27, 2025 10:20 AM IST

கோவை விமான நிலையத்தில் முன் அனுமதி இன்றி மக்களை திரட்டி இடையூறு செய்ததாக கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோவை விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் எதிரொலி! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
கோவை விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் எதிரொலி! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக பூத் கமிட்டி கூட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் 2 நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கோயம்புத்தூர் வந்தடைந்த தவெக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் கூடிய ஏராளமான இளைஞர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். மேலும், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டு, கருத்தரங்க அரங்கை நோக்கி சென்றனர். இந்த சாலை பேரணி குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

மேலும் படிக்க:- தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!

கொங்கு மண்டலத்தில் முதல் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கங்கள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது, இதில் முதல் கூட்டத்தை கொங்கு மண்டலத்தில் தவெக நடத்தியது. கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கம் தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரு பூத்துக்கு ஒரு ஆண் ஒரு பெண் தேர்வு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு, 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகள் நடத்துவதற்கு திட்டம் உள்ளதாக விஜய் அறிவித்த நிலையில் முதல் கட்டமாக கொங்கு மண்டலத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.