Business Loan : உற்பத்தி, சேவை, வணிக தொழிலுக்கு மானியக்கடன் – விவரங்கள் உள்ளே!
உற்பத்தி, சேவை மற்றும் வாணிபம் சார்ந்த தொழில்களை துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் தொழில் துவங்கி பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21 முதல் 55 வயது வரையிலான முதல் தலைமுறை தொழில்முனைவோா் ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டில், உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களை தொடங்குவதற்கு நிலம், கட்டிடம், இயந்திரம், தளவாடங்களை உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 18 முதல் 55 வயது வரையிலான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ரூ.15 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் வாணிபம் சாா்ந்த தொழில்களைத் தொடங்குவதற்கு 25 சதவீதம், அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.