Bus Strike: ’பணிக்கு வராத ஊழியர்களுக்கு பறக்கிறது மெமோ!’ அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடி
”Bus Strike: இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 30% ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பும் பணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது”
15-ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திமுகவின் தொமுச, காங்கிரஸின் ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்ததில் கலந்து கொள்ளவில்லை.
பொதுமக்களுக்கு பாதிப்புகள் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுத்தரப்பு சொல்வதற்கு போராட்டத்தில் ஈடுபடுள்ள தொற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசின் புள்ளிவிவரங்களை மறுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தினரைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போதும் கடைபிடிக்கப்படும் பொதுவான உத்தி தான் இது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குகிறார்கள் என்பதாலேயே வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விட்டதாகவோ, அரசு வெற்றி பெற்று விட்டதாகவோ கருத முடியாது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கும் ஓய்வு தேவை என்பதால் நேரம் செல்ல செல்ல இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறையும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 30% ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பும் பணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், மீறினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், போராட்டத்தை தூண்டும் தொழிலாளர்கள் மீதும் கட்டாயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஜனவரி 6ஆம் தேதியே அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பபட்டு இருந்தது.
இருப்பினும், 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில், 30% தொழிலாளர்களுக்கு மெமோ அனுப்பும் பணிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது. மெமோ கிடைக்க பெற்ற ஒரு வாரத்திற்குள் ஊழியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும
டாபிக்ஸ்