Bus Strike: ’உள்டா ஆன பஸ் ஸ்டிரைக்! சென்னை நிலவரம் தெரியுமா?’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bus Strike: ’உள்டா ஆன பஸ் ஸ்டிரைக்! சென்னை நிலவரம் தெரியுமா?’

Bus Strike: ’உள்டா ஆன பஸ் ஸ்டிரைக்! சென்னை நிலவரம் தெரியுமா?’

Kathiravan V HT Tamil
Jan 09, 2024 07:28 AM IST

”Bus Strike: பல்லவன் இல்லம் உள்ளிட்ட சென்னை மாநகரில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமணைகளை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பிஜான் வர்கீஸ் ஆய்வு செய்து வருகிறார்”

சென்னை மாநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை மாநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.

அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று பேருந்துகள் அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. காலை 6:00 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பல்லவன் இல்லம் உள்ளிட்ட சென்னை மாநகரில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமணைகளை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பிஜான் வர்கீஸ் ஆய்வு செய்து வருகிறார். 

போக்குவரத்து தொற்சங்கங்கள் போராட்டம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து சேவை தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை தந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வழக்கமாக பேருந்துகள் இயங்கி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 10 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது தவறான தகவல்.

பேச்சுவார்த்தையை தொழிற்சங்ககள்தான் முடித்துக் கொண்டு போராட்டம் அறிவித்துவிட்டார்கள். பணியாளர்கள் எடுக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணிநேரத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்காக 6 கோரிக்கை என்கிறார்களே தவிர அவர்கள் வலியுறுத்தும் கோரிக்கை ஒன்றுதான் என கூறி உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.