Malt Beer: இது வேற மாதிரி பீர் - டாஸ்மாக்கில் விற்பனைக்கு வந்த மால்ட்டில் தயாரான பீர்!
டாஸ்மாக்கில் விற்பனைக்கு வந்த மால்ட் பீர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (Tamil Nadu State Marketing Corporation) என்னும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பணி, தமிழ்நாடு மாநிலம் முழுமைக்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையினை செய்வதாகும்.
இங்கு, பல்வேறு கம்பெனிகளின் பீர், விஸ்கி, பிராந்தி, ஒயின், ரம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகளில் ஏராளமான கம்பெனிகளின் பீர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு புதிய பீர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது முழுக்க பார்லி என்னும் ரக தானியத்தால் உருவாக்கப்பட்டு, முதல்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் விற்பனைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் பார்லி என்னும் மால்டினால் உருவாக்கப்பட்ட ஸ்டாரங் பீராகும்.
650 மிலி கொண்ட இதன் முழு பாட்டில் மால்ட் பீரின் விலை ரூ.200ஆகவும், அரை பாட்டில் மால்ட் பீரின் விலை ரூ.100ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பிரிட்டிஷ் எம்பயர் என்னும் நிறுவனம் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதனால், மது பழக்கத்தைத் தவிர்க்க விரும்புவோர் இவ்வகை தானியத்தால் செய்யப்பட்ட மால்ட் பீரினை குடித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாய்ப்புண்டு எனப் பலரும் பேசி வருகின்றனர். இவ்வகை பீருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்