தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bride Family Killed Groom In Chennai For Caste Issue

Crime: காதல் திருமணம் செய்த தங்கை.. இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த குடும்பம்- சென்னையில் பரபரப்பு!

Aarthi Balaji HT Tamil
Feb 25, 2024 08:30 AM IST

பள்ளிக்கரணை அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் படுகொலை
இளைஞர் படுகொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அது போன்ற சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்து உள்ளது.

சென்னை பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்து உள்ளனர். இந்த காதலுக்குப் பெண்ணின் வீட்டார் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனால் பெற்றோர் விருப்பத்தை மீறி ஷர்மி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனை திருமணம் செய்து கொண்டார். இதனால் பிரவீன் மீது ஷர்மி வீட்டை சேர்ந்த நபர்கள் கடும் கோபத்தில் இருந்து உள்ளனர்.

இந்நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து பிரவீனை நேற்றிரவு படுகொலை செய்து உள்ளார்.

பள்ளிக்கரணை டாஸ்மார்க் கடை அருகே பிரவீனை மடக்கி சரமாரியாக வெட்டி வெட்டி கொலை செய்து உள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை காவல் துறையினர் பிரவீன் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தங்கையைப் பெற்றோர்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் பிரவீனை அண்ணன் தினேஷ் கொலை செய்ததாக கூறினர்.

தற்போது காவல் துறையினர் கொலை செய்துவிட்டு தப்பித்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்