தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Breathtaking Gifts By Maternal Uncle On His Niece's Puberty Function

தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி.. தலைசுற்ற வைத்த பூப்புனித நீராட்டு விழா சீர் வரிசை!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 26, 2024 10:15 AM IST

தமிழகத்தின் பாரம்பரியமாக சீர்வரிசை கொடுப்பது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவிற்கு தாய்மாமன் சீர் வரிசை சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கு தரப்படுவது வழக்கம்.

அசர வைத்த தாய் மாமன் சீர்வரிசை
அசர வைத்த தாய் மாமன் சீர்வரிசை

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தின் பாரம்பரியமாக சீர்வரிசை கொடுப்பது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவிற்கு தாய்மாமன் சீர் வரிசை சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கு தரப்படுவது வழக்கம்.

குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது உடன் பிறந்த அக்கா குழந்தைகள் தங்கச்சி குழந்தைகளுக்கு எந்த விசேஷங்கள் என்றாலும் தாய்மாமன் தன்னால் முடிந்த அளவு அனைவரையும் வியக்க வைக்க வகையிலும் நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் எனக் கூறி விழாக்களில் செய்முறைகளோடு வந்து நிற்பது வழக்கம். அதேபோல் அந்த விழா சபையில் தாய்மாமனுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கீழ் மழை பகுதியான கே சி பட்டியில் விவசாயி. தொழிலதிபர் AC ஐயப்பன் தனது மகள் தீபா அக்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினார். விழாவிற்காக வீட்டில் அருகிலேயே மிகப்பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார். தொடர்ந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவிற்கு வருபவர்களுக்கு சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் விழாவின் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் பகுதியில் இருந்து தனது தங்கை மகளை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் நகைகள், புத்தாடைகள், வாழை, மாதுளை, திராட்சை, உள்ளிட்டவைகளும் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 233 வகைகளில் சீர் கொண்டு வந்தனர்.

முடிந்தவரை தங்கள் தலைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ளவை லாரியில் வைத்தும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க கேரளா செண்டை மேளம். கேரளா பாரம்பரிய நடனம் என பல தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த மலை கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது. தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளையும் அழைத்துக் கொண்டு விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தார். இந்த விழா அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

மேலும் இந்த விழாவில் மலை கிராம மக்களால் ஆதிவாசி மக்கள் தங்களது பகுதியில் சேகரிக்கப்பட்ட வாழை, தேன், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களது சீராக கொண்டு வந்தது மலை கிராம மக்கள் இன்னும் யாரும் மாறவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்றும் மலையையே வியக்க வைத்த விழாவாகவும் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பூப்புனிதா நீராட்டு விழா அந்த மலைகிராமத்தின் பேசு பொருளாக தற்போது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்