Tamil News  /  Tamilnadu  /  Breaking News Live Updates 21 November 2023 Get Tamil Latest News Liveblog

Tamil Live News Updates: நவ.23ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

Kathiravan V HT Tamil
Nov 21, 2023 05:14 PM IST

Tamil Live News Updates: இன்றைய (21.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

AIADMK District Secretaries Meeting: சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து வரும் கூட்டத்தில் பூத் கமிட்டி, நாடளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

நவ.23ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

Cauvery Water: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் 23ம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார் கடந்த 3ம் தேதி கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா? என்பது வரும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Thiruvannamalai: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி

Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்லலாம் எனவும் முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி

ADMK: பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Manish Sisodia: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Rain: கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

முதியவர் மரணம்

Accident: நாகர்கோயில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான முதியவர் ராம் சுஷில் திவாரி உயிரிழப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் - கபில்தேவ் கருத்து

WorldCup 2023: ”விளையாட்டு தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அடுத்த நாளை திட்டமிட வேண்டும். நாம் கடந்து போன ஒன்றைத் திரும்ப பெற முடியாது. ஆனால் கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவனே உண்மையான விளையாட்டு வீரன்" உலகக்கோப்பை தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து

அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம்

Thangam Thennarasu: செய்தியாளர் சந்திப்பின் போது ‘நொண்டி சாக்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்தார் -முன்னதாக அமைச்சரின் பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது

தச்சு தொழிலாளிகள் உடன் ராகுல்

Rahul Gandhi: டெல்லியில் தச்சு தொழிலாளர்களை சந்தித்து உரையாடும் போது, அவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி தயாரித்த மேசை, மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது

கும்பக்கரை அருவியில் 19ஆவது நாளாக குளிக்க தடை

Theni: தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 19ஆவது நாளாக வனத்துறை தடை

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

CHENNAI: தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

தெலங்கானா தேர்தல் - காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு

Telangana Election 2023: வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

RAIN: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ADMK: சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்

பட்டங்களை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

MK Stalin: ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்

WhatsApp channel

டாபிக்ஸ்