தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: ராவணன் அறிவார்ந்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

Tamil Live News Updates: ராவணன் அறிவார்ந்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 13, 2024 06:18 PM IST

Tamil Live News Updates: இன்றைய (13.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் செயதிகள்
பிரேக்கிங் செயதிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

வெள்ளப்பாதிப்பு நிவாரண நிதியைத் தரக்கோரி அமித்ஷாவிடம் தமிழ்நாடு எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அனைத்துக் கட்சி எம்.பிக்குள் குழு வலியுறுத்தினர். அப்போது அதுதொடர்பான அறிக்கையை டி.ஆர். பாலு அமித்ஷாவிடம் வழங்கினார்.

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க வாழ பொங்கல் திருநாள் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு 

அரசுப்பணிகளுக்கு தேர்வு நடத்தும்போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்திற்குள் விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தவிர, டி.என்.பி.எஸ்.சி தொடர்பாக உண்மைத் தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காணொலி வாயிலாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி.

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது. அதில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

தஞ்சை பட்டுக்கோட்டை ஆணவக் கொலை வழக்கில் மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனகவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைமை நிர்வாக அலுவலராக பார்த்தீபன் நியமனம்!

கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலராக பார்த்தீபன் நியமனம்.

டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடிபழனிசாமி வாழ்த்து!

தைத்திருநாளையொட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அப்சராவுக்கு இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவு!

அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.13) சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5845 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (ஜன.13) ரூ.50 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

TASMAC: சென்னையில் வரும் ஜனவரி 15 , 25, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள், பார்கள், அனைத்து மூடப்படம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி அறிவித்துள்ளார். 

ஒரே நாளில் 2.17 லட்சம்பேர் பயணித்துள்ளனர்.

Pongal: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம்பேர் பயணித்துள்ளனர்.

இதுவரை 196310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது!

Coimbatore: ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா கோவை பொள்ளாச்சியில் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்த விழாவிற்கு பிரான்ஸ் ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பலூனில் பறக்க ரூபாய் 1600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு Mongolia: மங்கோலியாவின் சுப் பாதர் மாகாண நெடுஞ்சாலையில் இருந்த பனிக்குவியலில் சிக்கிய காரின் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

காணாமல் போன விமானம் 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

Missing Flight: 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடி வீரர் உள்ளிட்ட 29 பேருடன் மாயமான AN32 ரக சரக்கு விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே கடலுக்குள் 310 கிலோமீட்டர் தொலைவில் 3.40 கிலோமீட்டர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கடலில் விழுந்தது எப்படி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை!

Bank Holidays: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்!

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 602 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.13) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்