Tamil Live News Updates: "உதயநிதி மீதுதான் முதல்வரின் கவனம் உள்ளது" - அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: "உதயநிதி மீதுதான் முதல்வரின் கவனம் உள்ளது" - அண்ணாமலை

Tamil Live News Updates: "உதயநிதி மீதுதான் முதல்வரின் கவனம் உள்ளது" - அண்ணாமலை

Pandeeswari Gurusamy HT Tamil
Updated Jan 12, 2024 05:58 PM IST

Tamil Live News Updates: இன்றைய (12.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

"உதயநிதி மீதுதான் முதல்வரின் கவனம் உள்ளது" - அண்ணாமலை

Annamalai: முதலமைச்சரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை; எப்படி நம்முடைய மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக கொண்டுவந்து முதலமைச்சராக்குவது என்பதில்தான் உள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளது.

தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் ஆய்வு

Thoothukudi Flood: தூத்துக்குடி மாநகர் பகுதியில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு

Ponmudy Case: சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.

பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

Pongal 2024: டெல்லியில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறாா். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது.

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Nellai Mayor: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த இன்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

வரும் 31-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்

 

Budget 2024: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி முதல் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நடப்பு அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மனு தள்ளுபடி!

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான ED அதிகாரி அங்கித் திவாரியை, அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம் ஓர் ஆண்டாக குறைத்து அரசாணை வெளியீடு!

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியீட்டுள்ளது. படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ரூ.40 லட்சத்துக்கு பதில், ரூ. 20 லட்சம் கட்டினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் உடலில் ஓடும் அதிமுக ரத்ததை மாற்ற முடியாது- ஓ.பன்னீர்செல்வம்

எந்த நீதிமன்ற தீர்ப்பாலும் என் உடலில் ஓடும் அதிமுக ரத்ததை மாற்ற முடியாது என தேனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 % உயர்த்தியது நியாயமில்லை - ஜி.கே.வாசன்!

தமிழக அரசு பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நாகை டீ மாஸ்டர் கொலை - 2 பேர் கைது!

நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் டீ மாஸ்டரை கொலை செய்ததாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பர்களான 3 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது, ஒரு நண்பனின் காதலி குறித்து டீ மாஸ்டர் ரவிச்சந்திரன் அவதூறாக பேசியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் அவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.12) சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 5820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!

மறைந்த விஜயகாந்தின் X (டுவிட்டர்) கணக்கை அவரது மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது பெயருக்கு மாற்றி உள்ளார்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சில நாட்களிலேயே சமூக வலை தள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாகி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவில் தீர்ப்பு

Senthil balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது

3வது முறையாக ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

Rain Update: தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் மூன்று பேர் தலைமறைவு 

Periyar University சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள பூட்டர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்த அவரது கூட்டாளிகள் தங்கவேலு, சதீஷ், ராம் கணேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவான மூன்று பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது வழக்கு பதிவு

R.N. Ravi: பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ஆரன் ரவிக்கு எதிராக பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் எழுந்த நிலையில் ஆளுநர் வருகையின் போது எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கருப்பு கொடிகள் உடன் சட்டவிரோதமாக கூடியதாக கோட்டை கவுண்டம்பட்டி விஏஓ மோகன் கொடுத்த புகாரின் பேரில் கருப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 178 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைக்கும் மோடி!

Modi: இந்தியாவின் மிக நீளமான பாலத்தை மும்பையில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அடல் சேது என பெயரிடப்பட்டுள்ள இந்த கடல் பாலம் 21.8 மீட்டர் நீளத்தில் 17840 கோடியில் மும்பை நவி மும்பை இடையே கட்டப்பட்டுள்ளது.‘

பெட்ரோல் விலை நிலவரம்!

Petrol: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 601 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.12) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.