தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Breaking News Live Updates 11 January 2024 Get Tamil Latest News Liveblog

Tamil Live News Updates: ED அதிகாரி அங்கித் திவாரியின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

Kathiravan V HT Tamil
Jan 11, 2024 05:39 PM IST

Tamil Live News Updates: இன்றைய (11.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Earthquake: டெல்லி மற்றும் வடக்கு மத்திய பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டா் அளவில் 2.6 ஆக பதிவாகியுள்ளது.

அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

Ayalaan: அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம்.எஸ் சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.50 லட்சம் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளது.

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

VAO Arrest: கடலூர் மாவட்டம் மதலப்பட்டு விஏஓ பிரபாகரன் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளாா். பட்டா பெயர் மாறுதலுக்காக ரூபாய் 40,000 லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

DMK: சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி 2வது இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு 22ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

Senthil Balaji: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி

Governor RN Ravi: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்த வரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற மாணவர் அமைப்பினர் மறும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

பூடான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Modi: பூடான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெரிங் டோப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவு

ஓபிஎஸ் மனு தள்ளுபடி

OPS: அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய ஓபிஎஸ் மனு தள்ளுபடி

நெல்லையில் 15.செ.மீ மழை

Rain: நெல்லை நாலுமுக்கு பகுதியில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கொடநாடு கொலை - சயான் ஆஜராகவில்லை

Kodanadu Murder Case: கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராகவில்லை. 

கேரளாவில் மற்றொரு வழக்கு உள்ளதால் சயான் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் மீண்டும் ரெய்டு

IT Raid: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பரப்பளவு, மதிப்பு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்து மதிப்பீடு செய்கின்றனர். 

கன்னியாகுமரியில் மழை எச்சரிக்கை

Kanniyakumar Rain: இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

கும்பக்கரை அருவிக்கு செல்ல 3வது நாளாக தடை

Theni: அதிக நீர்வரத்து காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக தடை விதித்து வனத்துறை நடவடிக்கை 

ஓபிஎஸ் வழக்கில் இன்று தீர்ப்பு

OPS vs EPS: அதிமுகவின் பெயர், கட்சி, சின்னம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நாடாளுமன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

Loksabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

அரசுத் தலைமை வழக்கறிஞர் இன்று பொறுப்பேற்பு

BS Raman: தமிழ்நாடு அரசின் புதிய அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பி.எஸ்.ராமன் இன்று பொறுப்பேற்கிறார்.

இன்று முதல் பணிக்கு திரும்பும் ஊழியர்கள்

Bus strike: போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் செல்லூர் ராஜூ

Sellur raju: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.

அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்

Hanuman Jayanthi: தமிழகம் முழுவதும் உள்ள அனுமன் கோயில்களில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்.

லேசான மழைக்கு வாய்ப்பு 

Rain: தமிழ்நாட்டில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

பரூக் அப்துல்லாவுக்கு நோட்டீஸ்

ED: காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன்.

டி20 கிரிக்கெட் போட்டி

IND VS AGF: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்