Tamil Latest News Updates: உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 5.5 லட்சம் கோடி திரண்டது!
இன்று (7-01-2024) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
சென்னையில் மிக கனமழை எச்சரிக்கை
Chennai Heavy Rain: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை
உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 5.5 லட்சம் கோடி திரட்டப்பட்டது!
TNGIM 2024: தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளிலேயே 5.5 லட்சம் கோடி முதலீட்டு திரட்டப்பட்டு இலக்கை எட்டப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
48 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
IPS Transfer: தமிழ்நாட்டில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
2 பேரை கொன்ற சிறுத்தை பிடிப்பட்டது
Nilgiris: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரை கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அதனை வனத்துறையினர் பிடித்து கூண்டில் ஏற்றினர்.
கட்டடம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Eroad: ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே ஜவுளி நகரில் கட்டடம் விழுந்து பணியாளர் ஒருவர் உயிரிழப்பு
சிறுத்தை தாக்கி உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
Nilgiris: நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3½) த/பெ. சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது
Nilgiris: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சிறுமியை கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது
நீலகிரியில் சிறுத்தை நடமாட்டம் - சீமான் கண்டனம்!
Seeman: நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் பொதுமக்களைத் தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை சிறுத்தை தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியும், மிகுத்த அச்சமும் அடைந்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்கச்சொல்லி வனத்துறையிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு அரசுக்கு முகேஷ் அம்பானி புகழாரம்!
TNGIM 2024: தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, காணொலி வழியே உரையாற்றினாா். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
TNGIM 2024: உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் கையெழுத்து ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஹூண்டாய், டாடா எலக்ட்ரானிக்ஸ், TVS குழுமம், கோத்ரேஜ், First Solar நிறுவனம், பெகட்ரான், JSW நிறுவனம், மிட்சுபிசி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு
TNGIM 2024: டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக முதலீடு
TNGIM 2024: தமிழ்நாட்டில் கடந்தாண்டு ரூ.20,000 கோடி செய்த ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொழில் தொடர்பு உள்ளதாக அந்நிறுவன இந்திய நிர்வாக அதிகாரி தொிவித்துள்ளாா்.
உலக முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது
TNGIM 2024: உலக முதலீட்டாளா்கள் மாநாடு சென்னை வா்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் உலக வா்த்தக மாநாட்டில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் முதலீடுகளை ஈா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை
Vaigai Dam: தொடர் மழையால் வைகை அணை நிரம்பியதையடுத்து விநாடிக்கு 4,489 கன அடி நீா் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்ட மக்களுக்க வெள்ள அபாய எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காயல்குடி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியது!
Sivakasi : சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காயல்குடி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் நதிக்குடி, சுப்பிரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம் ரெங்கசமுத்திரப்பட்டி, புலிப்பாரைபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வருகிற 9ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்தும் அரசுப்பேருந்தும் மோதி விபத்து!
Kanchipuram Accident : காஞ்சிபுரம் கருக்குப்பேட்டை அருகே மாமல்லபுரத்தில் இருந்து காஞ்சி நோக்கி வந்த தனியார் பேருந்தும் தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தும் மோதி விபத்து. 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடகடலோர மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
Bangladesh Elections : வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 42,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் எனக்கோரி, பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளது.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடக்கம். ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டம். சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.31,000 கோடி முதலீடு செய்கின்றன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று தொடங்குகிறது டோக்கன் வழங்கும் பணி!
Pongal Gift : வரும் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகின்றன. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
சென்னையில் பரவலாக மழை!
Rain Update : சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை
Petrol Diesel Price : சென்னையில் இன்று (ஜன.07) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Rain Update : திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9