Tamil News  /  Tamilnadu  /  Breaking News Live Updates 04 January 2024 Get Tamil Latest News Liveblog

Tamil Live News Updates: பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 04, 2024 06:14 PM IST

Tamil Live News Updates: “இன்றைய (04.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்”

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

Udhayanidhi Stalin: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். 

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

IND vs SA 2nd Test: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி 

2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.

பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Udhayanithi stalin: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு - தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு

IND vs SA 2nd Test: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு

வரும் ஜன.17 இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

Jallikattu: வரும் ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுமென மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டில் சாதி கூடாது

Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்னர் தீண்டாமை உறுதி மொழி எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யவும் உத்தரவு 

லியோவில் எத்தனை வன்முறை காட்சிகள்?

Leo Movie: நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதில் தர உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது!

sterlite: தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டாலும் கூட, அதற்காக ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதித்து தீர்ப்பு வழங்கியதை தமிழ்நாடு மறந்துவிடக்கூடாது ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை!

Suicide: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேதாஜி நகர் பகுதியில் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கு ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆன்லைனில் போதை மருந்து விற்பனை - இரண்டு பேர் கைது!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன், ஸ்டீஃபன் என்ற இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கிய போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

கேப்டன் நினைவிடத்தில் சிவக்குமார் அஞ்சலி

Vijayakanth: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Gold Rate:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.04) ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து ரூ.46,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 45 ரூபாய் குறைந்து ரூ.5870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (ஜன.4) 2 ரூபாய் குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

Modi: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். 

விழுப்புரம் அருகே சாலை விபத்து - 10 பேர் படுகாயம்

Accident: விழுப்புரம் புறவழிச் சாலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த கிரேன் மோதியதில் பேருந்துக்கு முன்னால் சென்ற லாரிகளில் அடுத்தடுத்து மோதி விபத்து. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர் . இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுவை ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 !

Puducherry: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூபாய் 500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கான வேஷ்டி புடவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

சச்சின் ஆச்சர்யம்

Sachin Tendulkar: இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் எடுத்து முன் நிலையில் உள்ளது. இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியதாவது,

“ நான் எதைத் தவற விட்டேன் ஒரே நாளில் 23 விக்கட்டுகள் இழந்ததை நம்ப முடியவில்லை தென்னாபிரிக்கா ஆல் அவுட் ஆனபோது விமானத்தில் ஏறினேன். வீட்டுக்கு சென்று பார்க்கும் போது தென்னாபிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது நான் எதை தவறவிட்டேன்” என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஜன.04) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 593 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்