லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா பணியில் இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலில் இருந்து பிறந்தநாள் ஊர்வலம் தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடு பணிகளில் உமாசங்கர் இரவு முழுவதும் ஈடுபட்டு வந்தார்.

லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா.. பணியில் தீவிரமாக இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!
புதுச்சேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை, வழக்குகளில் தொடர்புடையவர் கருவடிக்குப்பம் சேர்ந்த உமாசங்கர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவ்வப்போது தலைமுறைவாகவும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இருந்து வருகிறார்.
