Annamalai: ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்’.. அண்ணாமலை பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்’.. அண்ணாமலை பேச்சு!

Annamalai: ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்’.. அண்ணாமலை பேச்சு!

Karthikeyan S HT Tamil
Published Jan 10, 2024 08:52 PM IST

பாஜக ஆட்சிக்கு வந்தால் மூன்று ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள் யாத்திரை' மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, ஏழை மக்களுக்காக ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் ‘என் மண், என் மக்கள் யாத்திரை ’ மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 31 மாதம் திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. 9 ஆண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

திமுக அரசு இந்தி திணிப்பு என அரசியல் செய்து வருகிறது. ஆனால், மோடி இந்தியா முழுவதும் தமிழ் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தமிழகத்துக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழை உலக அளவில் கொண்டு செல்கிறார். பிரதமர் மோடி தாய்மார்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். தற்போதைய நிலவரத்தை பார்த்தால் காங்கிரஸ் கட்சியினரே மோடிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என தெரிகிறது.

தமிழகத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 5-ல் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மது குடிப்பதை தடுக்க முடியாது. தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும்.  பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிபடியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், பனை, தென்னையில் 168 மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என பாஜக சார்பில் அறிக்கையை முதல்வர், ஆளுநரிடம் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக் நடத்துவது அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக இல்லை. திமுகவினரின் நடத்தும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக தான்." இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.