‘டாஸ்மாக் முறைக்கேட்டை மறைக்க கண்ணாமூச்சி ஆடும் தமிழக அரசு’ பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்!
டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது என்ற அமலாக்க துறையின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை டாஸ்மாக் முறைகேட்டை மறைக்கவே தமிழ்நாடு அரசு தொகுதி மறு சீரமைப்பை கையில் எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் விற்கப்படும் மதுபான விற்பனையில் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பான செய்தியாக மாறி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இந்த செய்திக் குறிப்பை இப்போது தான் படித்தேன். நாங்கள் முதலில் இருந்தே யூகித்தோம். ஊடகங்களில் அரசல் புரசலாக செய்தி வந்த போதே எங்களுக்குத் தெரியும். நாங்கள் எதைக் குறித்து பயந்தமோ அது அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக உண்மையாகியுள்ளது. சத்தீஸ்கரிலும், டெல்லியிலும் என்ன மதுபான மோசடி நடந்ததோ அதை விட பெரிய மோசடி சென்னையில் நடந்து இருக்கும் என நினைக்கிறோம். தமிழ்நாடு இதனை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பை கையில் எடுத்துள்ளது” எனக் கூறினார். தமிழ்நாடு அரசு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “தற்போது தான் டாஸ்மாக் துறை அமைச்சர் சிறைக்கு சென்று வந்துள்ளார். மீண்டும் இது போன்ற பிரச்சனை வருகிறது என்றால் டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் இனி வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும்” எனவும் கூறினார். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும், போராட்டம் குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
டாஸ்மாக்கினை முறையாக பயன்படுத்தவில்லை
டாஸ்மாக்கினை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் போலியாக விற்பனை செய்வது என்பது இதன் மூலம் தெளிவாகிறது எனவும் தெரிவித்தார். இதனை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்கென்றே நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.
திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்" எனவும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்றும் மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன; திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது என்றும்' டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளி்ல் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை (ED) பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல FIRகளின் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது. இந்த எஃப்ஐஆர்கள் (i) டாஸ்மாக் கடைகள் உண்மையான எம்ஆர்பியை விட அதிகமாக வசூலிக்கும் வகைகளில் அடங்கும்; (ii) சப்ளை ஆர்டர்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கும் டிஸ்டில்லரி நிறுவனங்கள்; (iii) டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் சில்லறை டாஸ்மாக் கடைகளில் இருந்து லஞ்சம் வசூலிப்பது மற்றும் டாஸ்மாக் ஊழியர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் பணியமர்த்துவது போன்றவை இதில் அடங்கியுள்ளன.

டாபிக்ஸ்