Annamalai, Seeman: பெரியார் குறித்து சர்ச்சை.. “சீமான் அண்ணனுக்கு ஆதரவாக ஆதாரங்களை நான் தருகிறேன்”.. அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai Support to Seeman: பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக நான் வெளியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை புத்தக விழாவில் சில கருத்துக்களை கூறியிருந்தார். சீமான் கூறியதை போல் பெரியார் பேசியது உண்மை தான். பெரியார் கூறியதாக சீமான் கூறியவற்றுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால், அதை பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து. பெரியார் பேசியதாக வெளியாகி இருந்த எத்தனையோ புத்தகங்களை அவர்கள் அழித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெரியார் பேசி இருக்கிறார்.
பெரியார் பேசி இருப்பதாக கூறிய கருத்தை, அவர் எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதனை பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பெண்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார் பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதை போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது.
ஆனால், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் ஒரு கருத்தை வைத்து இருக்கிறார்கள். சீமான் ஏன் சொன்னார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை பெரியார் பேசி இருக்கிறாரா? என்று கேட்டால் அவர் பேசி இருக்கிறார்.
பெரியார் ஒரு காலத்தில் பேசியதை தற்போது பேசினால் மக்கள் அறுவறுப்பு அடைந்துவிடுவர். பெரியார் பேசியதை தற்போது பொது வெளியில் பேசினால் நாகரீகமாக இருக்காது. பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை அண்ணன் சீமானுக்கு ஆதரவாக நான் வெளியிடுவேன். சீமான் கூறியதை பெரியார் எங்கு, எப்போது பேசினார் என நான் ஆதாரங்களை இன்று வெளியிடுவேன்." என்று தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் தெரிவித்திருந்தார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார் என பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்களை அவர் முன்வைத்தார். சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடையை செய்திகள்