‘சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை..’ வீட்டு அருகில் நடந்தது என்ன? இதோ போட்டோக்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை..’ வீட்டு அருகில் நடந்தது என்ன? இதோ போட்டோக்கள்!

‘சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை..’ வீட்டு அருகில் நடந்தது என்ன? இதோ போட்டோக்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 27, 2024 11:32 AM IST

பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.

‘சாட்டையால் அடித்து நியாயம் கேட்ட அண்ணாமலை’ விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்!
‘சாட்டையால் அடித்து நியாயம் கேட்ட அண்ணாமலை’ விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்!

ஏன் இந்த தண்டனை? அண்ணாமலை சொன்னது என்ன?

இனி ஆர்ப்பாட்டம் செய்யும் வேலை எல்லாம் கிடையாது. ஓவ்வொரு வீட்டிற்கு முன்னாடியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தாய் ,சகோதரிக்காக போராடுவேன். நாளை எனக்கு நானே சாட்டையில் அடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையில் அடித்து கொள்ள போகின்றேன். திமுக ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன்.

நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ,ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றார்கள் போதும். வேறு வழியில்லை.மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.

நடுத்தர மக்கள் வெளியில் வாங்க. மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதை பேச வேண்டும். பொறுப்பேற்று கமிஷனர் பதவி விலக வேண்டும். குறைந்தது டெபுடி கமிஷனர் பதவி விலக வேண்டும். சிசிடிஎன்ஸ் நெட் ஓர்க்கில் இருந்து எப்படி FIR வந்தது? அந்த பெண் சரியில்லாதவர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக இதை வெளியிட்டு இருக்கின்றனர்.

இதெல்லாம் ஒரு தண்டனையா?

கை,கால் உடைப்பு ஒரு தண்டனையா ? உண்மையான அரசா இருந்தால் 10 நாளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்து தண்டணை கொடுக்க வேண்டும். அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கின்றார். தப்பு பண்ணினால் சொல்வது எங்க வேலை, பதில் சொல்வது உங்க வேலை. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். நிர்பயா பன்ட் கொடுத்து இருக்கின்றோம் சார். அது எங்கே போச்சு. அது எதற்கு கொடுத்தோம்? 

ஓன் டிரில்லியன் டாலர் என்ன வெங்காயத்துக்கு? முன்பே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு இருக்கின்றார் அந்த நபர். அது ஒரு நாள் குற்றமா என தெரியவில்லை. விரச கதைகளை போல இருக்கு . சித்தாந்தம், லொட்டு,லொசுக்கு எல்லாம் இனி பார்க்க போவதில்லை. வேறு மாதிரி அரசியல் செய்யனும். பொள்ளாச்சி வழக்கும் இதே மாதிரிதான். ஊழல் சொன்னாலும் காமன்தான்.

வழியில் அழைத்து சென்றான் என்று FIR ல் எழுதி இருக்கு. அப்படி என்றால் அவர் அடிக்கடி கல்லூரி வளாகத்திற்கு வந்து சென்றவர் என்று அர்த்தம். சமூக நீதியை பற்றி பேச வெட்கப்பட வேண்டும். நேற்று ஒரு தேவாலயத்திற்கு போக விட மாட்றானுக. ஒரு சர்ச்சுல போயி மாஸ் அட்டன் பண்ண விடமாட்றாங்க. சமூக நீதிக்கு பா.ஜ.க என்ன செய்து இருக்கு, திமுக என்ன செய்து இருக்கு என பேசலாம்?

என்று நேற்றை செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியிருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.