மொழிக் கொள்கை விவகாரம்: ”What, Bro…! Practice What You Preach, Bro…!” விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மொழிக் கொள்கை விவகாரம்: ”What, Bro…! Practice What You Preach, Bro…!” விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்!

மொழிக் கொள்கை விவகாரம்: ”What, Bro…! Practice What You Preach, Bro…!” விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்!

Kathiravan V HT Tamil
Published Feb 26, 2025 04:20 PM IST

உங்கள் குழந்தைக்கு 3 மொழி, நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் 3 மொழி ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களின் குழந்தைகளுக்கு 2 மொழி

மொழிக் கொள்கை விவகாரம்: ”What, Bro…! Practice What You Preach, Bro…!” விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்!
மொழிக் கொள்கை விவகாரம்: ”What, Bro…! Practice What You Preach, Bro…!” விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி:- 

கோயம்புத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கு அநியாயம் நடைபெற போவதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மார்ச் முதல் வாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் அவர்கள் பாஜகவுக்கும் கடிதம் எழுதி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மேடையிலேயே தொகுதி மறுசீரமைப்பு எப்படி நடக்கும் என்பதை கூறி உள்ளார். 

543 நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது எண்கள் கூடலாம். ஆனாலும் விகிதாச்சார அடிப்படையில் இது நடைபெறும். உதாரணமாக தேசிய அளவில் 20 சதவீதம் உயர்வு என்றால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 20 சதவீதம் என்ற அடிப்படையில் இந்த உயர்வு இருக்கும். ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பியும், உத்தரப்பிரதேசத்தில் 45 லட்சம் பேருக்கு ஒரு எம்.பியும், தமிழ்நாட்டில் சில இடங்களில் 25 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம்.

விகிதாச்சார அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் என்ணிக்கை உயர்வும் என்று அமித்ஷா தெரிவித்துவிட்டார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்பதை பிரதமர் மறுத்துள்ளார். முதலமைச்சருக்கு இந்த தகவலை கொடுத்தது யார்?, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தவறான தகவலை இப்படி சொல்லலாமா?

மேலும் படிக்க:- மும்மொழிக் கொள்கை: "What Bro…! It’s Very Wrong Bro….!" பாஜக, திமுகவை விளாசிய விஜய்!

விஜய் சொல்வது ஒன்று! செய்வது வேறொன்றா?

தமிழக வெற்றிக் கழகம் 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் சகோதரர் விஜய் பேசும் போது மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி உள்ளார். நான் சகோதரர் விஜய் அவர்களை கேட்கிறேன். Practice what you preach and tell lies.

உங்கள் குழந்தைக்கு 3 மொழி, நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் 3 மொழி ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களின் குழந்தைகளுக்கு 2 மொழி. What Bro…! Practice What You Preach Bro…! நீங்கள் எப்படி வாழ்கையில் நடந்து கொள்கிறீர்களோ, அதே போல் செய்யுங்கள் ப்ரோ என்பதை அவருக்கு வலியுறுத்துகிறேன். 

Get Out என்று ஆரம்பித்த உடன் பிரசாந்த் கிஷோர் விஜயை பார்த்து Get Out என்கிறார். நான் கையெழுத்து போட மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் எஸ்கேப் ஆகிவிட்டார். எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் ப்ரோ, ப்ரோ என்று பொய் சொல்லலாமா ப்ரோ. 

மேலும் படிக்க:- ’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

பிரசாந்த் கிஷோரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் 

பீகாரில் இருந்து வந்த ஒருவருக்கு தமிழ்நாட்டில் பெயர் கிடைப்பது மகிழ்ச்சிதான். தமிழ்நாட்டில் நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி, ‘ஏன் அண்ணே திமுகவை ஆட்சிக்கு வர வைத்தீர்கள்?’ அதற்காக மக்கள் எப்போதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள். 

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் யார் எந்த வேலையை செய்தாலும் தமிழர்கள் மரியாதை கொடுப்பார்கள். அதற்கு உதாரணம் தோனி அவர்கள். அவரை நம்முடைய வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொண்டு உள்ளோம். 

தவெக விழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பஞ்சாயத்து வரக்கூடாது என்பதற்காகதான் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு கொடுத்தோம். அவர்கள் ரொம்ப நாசுக்காக, நாகரீகமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் விவிஐபி பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.