Tamil News  /  Tamilnadu  /  Bjp State Leader Annamalai Meets Over Video Controversy In East Bypoll
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

'எங்கள் பலத்தைக் காட்ட ஈரோடு இடைத்தேர்தல் தேவையில்லை' - அண்ணாமலை அறிவிப்பு

30 January 2023, 20:50 ISTKarthikeyan S
30 January 2023, 20:50 IST

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓரிரு நாட்களில் எங்களின் முடிவை அறிவிப்போம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், கோவை ஈச்சனாரி கோயிலில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு இன்று பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் கலந்துகொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை அளித்த பேட்டி: "புனித யாத்திரையை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஈச்சனாரியில் இருந்து தொடங்கி இருக்கிறார். கொங்கு பகுதியில் இருந்து பாஜக வளர 3 நாட்கள் நடை பயணமாக அவர் பழனி செல்கிறார். இது சரித்திர பயணமாக புனித பயணமாக இருக்கும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பணப்பட்டுவாடா குறித்துப் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறோம். அதில், பணப்பட்டுவாடா தொடங்கி, சக அமைச்சரான சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை கே.என்.நேரு தகாத வார்த்தைகளில் பேசுவது பதிவாகியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவிருக்கிறோம்.

அமைச்சர் எ.வ.வேலு நான் அதை எடிட் செய்திருக்கிறேன் எனக் கூறுகிறார். அப்படி நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். கே.என்.நேரு பேசியது உண்மை என்றால், தமிழக மக்களிடம் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

கோயிலை இடித்ததை டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். டி.ஆர்.பாலு, இளங்கோவன் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். சேலத்தில் கோயிலுக்குள் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர் உள்ளே செல்லும்போது எப்படி தடுக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம். தமிழகம் முழுவதுமே இதுதான் நடக்கிறது. கேட்டால் சமூக நீதி என்கின்றனர். திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச என்ன அருகதை உள்ளது. 30 நாட்களாகியும், புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓரிரு நாட்களில் எங்களின் முடிவை அறிவிப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு வலுவான வேட்பாளர் நின்று, வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் திமுகவின் தோல்வியை உறுதிப்படுத்த வேண்டும். இது பாஜக பலத்தை பரிசோதிக்கும் தேர்தல் அல்ல. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களுக்கான தேர்தல்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாபிக்ஸ்