‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்
“இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. ஆனால், ஞானசேகரனுக்கு உதவியவர்கள் யார்? இந்தக் குற்றத்திற்கு பின்புலம் என்ன? இவர் தனியாகவா குற்றம் செய்தார்?

எதிர்க்கட்சிகளை கோமாளிகள் என்று அழைப்பது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்து உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் எதிர்க்கட்சிகளை “கோமாளிகள்” என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக, “கோமாளிகள் என்று சொல்பவர்கள் ஏமாளிகளாகப் போகிறார்கள்” என்று தமிழிசை கூறினார். மேலும், திமுக அரசின் ஆட்சி முறையையும், மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் சுமையையும் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவின் தீர்மானம் மற்றும் விமர்சனம்
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி பேசிய தமிழிசை, “எதிர்க்கட்சிகளை கோமாளிகள் என்று அழைப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. ஆளும் கட்சி என்பதால் தங்களை திறமையாளர்களாகவும், எதிர்க்கட்சிகளை கோமாளிகளாகவும் கூறுவது ஏற்க முடியாது,” என்றார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கேள்வி எழுப்பினார். “எந்தக் குற்றத்திற்காக தோழர்கள் ஓடிப்போனார்களோ, அதற்கு துணை நிற்பதற்காகவா இந்த தீர்மானம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.