Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Mk Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!

Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Published Feb 15, 2025 11:37 AM IST

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?

Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!
Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!

காவல்துறை விளக்கம்:-

இந்த சம்பவத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல; முன் விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறே சம்பவத்திற்கு காரணம் என காவல்துறை கூறி உள்ளது. தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. சம்பவ தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோரை மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. 

அண்ணாமலை கண்டனம்

இந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனை 

தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

மு.க.ஸ்டாலினுக்கு கூச்சமே இல்லையா?

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.