’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!

’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!

Kathiravan V HT Tamil
Published Jan 26, 2025 12:46 PM IST

தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை என அண்ணாமலை விமர்சனம்

’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!
’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!

இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் அண்ணாமலை விமர்சனங்களை முன் வைத்து உள்ளார். அதில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற திரு மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், தற்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.