தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp Mla Vanathi Srinivasan Came To The Legislative Assembly Wearing A Black Saree

கருப்பு உடையில் பேரவைக்கு வானதி! ராகுலுக்கு ஆதரவா? ரவுண்டு கட்டிய செய்தியாளர்கள்

Kathiravan V HT Tamil
Mar 27, 2023 11:58 AM IST

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு உடையில்தான் இன்று பேரவைக்கு வந்துள்ளதாக செய்தியாளர்கள் சொல்ல ’ஐயயோ இன்னைக்கா! கடவுளே!’ என்று வானதி சொல்ல, அவரை சூழ்ந்து கொண்டு ஒளிப்பதிவாளர்கள் படமெடுக்கத் தொடங்கினர்.

கருப்பு நிற உடையில் சட்டப்பேரவைக்கு வந்த வானதி சீனிவாசனை சூழ்ந்து கொண்டு படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள்
கருப்பு நிற உடையில் சட்டப்பேரவைக்கு வந்த வானதி சீனிவாசனை சூழ்ந்து கொண்டு படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக பதாகைகளுடன் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும் இன்று நாள் முழுவதும் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் சட்டப்பேரவைக்கு கருப்பு நிற சேலை அணிந்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வந்த சம்பவம் அவையிலும் அவைக்கு வெளியிலும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு நிற சேலை அணிந்து வந்த வானதி சீனிவாசனிடம் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருப்பு உடை அணிந்து வந்துள்ளீர்களா என்று கேட்க ‘இல்லையே’ என்று பதிலளித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு உடையில்தான் இன்று பேரவைக்கு வந்துள்ளதாக செய்தியாளர்கள் சொல்ல ’ஐயயோ இன்னைக்கா! கடவுளே!’ என்று வானதி சொல்ல, அவரை சூழ்ந்து கொண்டு ஒளிப்பதிவாளர்கள் படமெடுக்கத் தொடங்கினர்.

‘இது பற்றி எனக்கு தெரியாது கடவுளே! வழி விடுங்க’ என்று கூறியவாறே அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் பேரவைக்கு வானதி சீனிவாசன் சென்றார்.

கேள்வி நேரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பிய போது சபாநாயகர் அப்பாவு “காங்கிரஸ்காரங்கதான் யூனிபார்மில் வந்து இருக்காங்க; நீங்களும் அதே யூனிபார்மில் வந்தது போல் எனக்கு தெரிகிறது” என்றார்.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு பதிலளிக்கும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு பதிலளிக்கும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ “மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே தமிழகத்தில் எமர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் ஆளும் கட்சி தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக நான் கருப்பு உடையில் வந்துள்ளேன்” என்றார். வானதி சீனிவாசனின் இந்த பதில் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்