BJP: மத்திய அமைச்சர் எல்.முருகன் முன் மாறிமாறி திட்டிக் கொண்ட பாஜகவினர்! தஞ்சாவூரில் கடும் பரபரப்பு!
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக தற்போது உள்ள ஜெய்சதீஷ் என்பவரின் பெயரே மீண்டும் அறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரிவினர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் பாஜக உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று கூறி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக உட்கட்சித் தேர்தல்!
தமிழக பாஜகவில் உட்கட்சித்தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்று உள்ளன. பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட வாரியாக தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 19ஆம் தேதி அன்று பாஜக சார்பில் முதற்கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியானது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை பாஜக அமைப்பு ரீதியாக பிரித்து தலைவர்களை அறிவித்தது.
தஞ்சாவூரில் வாக்குவாதம்!
இந்த நிலையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக தற்போது உள்ள ஜெய்சதீஷ் என்பவரின் பெயரே மீண்டும் அறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரிவினர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கட்சி நிர்வாகிகளை சிலர் சமாதனப்படுத்தினர். மத்திய இணையமைச்சர் முன்னிலையிலேயே பாஜகவினர் சலசலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
