Tamilisai vs Kanimozhi: ”மக்களை ஏளனம் செய்வது யார்?" கனிமொழிக்கு தமிழிசை சௌந்தராஜன் சரமாரி கேள்வி
Tamilisai vs Kanimozhi: இவங்க பாட்டிலுக்கு கமிஷன் வாங்குறவங்க எல்லாம் இப்படி பேசினா, நேர்மையா அரசியல் செய்றவங்க எப்படி பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"மக்களை ஏளனம் செய்வது யார்?" என திமுக எம்.பி. கனிமொழிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழகத்தை ஏளனம் செய்வது யார் என்று திமுக எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த கனிமொழியின் கருத்துக்கு எதிராக, தமிழக மக்களை உண்மையில் ஏளனம் செய்பவர்கள் திமுகவினரே என்று தமிழிசை சௌந்தராஜன் குற்றம் சாட்டினார்.
பொய்களை பரப்புகின்றனர்
தமிழிசை தனது பேட்டியில், "இவங்க பாட்டிலுக்கு கமிஷன் வாங்குறவங்க எல்லாம் இப்படி பேசினா, நேர்மையா அரசியல் செய்றவங்க எப்படி பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். தமிழக நிதி நிலைமை குறித்து திமுகவின் விமர்சனங்களை சுட்டிக்காட்டிய அவர், "9 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துவிட்டு, தமிழக நிதி அமைச்சர் ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் பொய்களை பரப்பி வருகிறார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உதவி செய்கிறது, ஆனால் திமுகவோ அதை மறைத்து விமர்சிக்கிறது," என்று கூறினார்.
மேலும் படிக்க:- Heavy Rain Alert: ’8 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நிர்மலா சீதாராமனுக்கு புகழாரம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்து பேசிய தமிழிசை, "இன்று இந்திய பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியந்து கொண்டிருக்கின்றன. நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் பிறந்த ஒரு பெண்மணியாக, தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து பெருமை சேர்த்து வருகிறார். பிரதமரே அவருக்கு மரியாதை செலுத்துகிறார்," என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:- சசிகலா, ஓபிஎஸை சேர்க்க பாஜகவிடம் இருந்து அழுத்தமா? உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
கனிமொழிக்கு பதிலடி
"நிர்மலா சீதாராமன் தமிழகத்தை ஏளனம் செய்கிறார்" என்ற கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழிசை, "நீங்கள்தான் தமிழக மக்களை ஏளனமாக நினைக்கிறீர்கள். மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள், ஆனால் எங்கே குறைத்தீர்கள்? அதிக விதவைகள் இருப்பதாக கூறினீர்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடாமல் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைப்பது யார்? நீங்கள்தான் மக்களை ஏளனமாக பார்க்கிறீர்கள்," என்று காட்டமாக விமர்சித்தார்.
திமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி மீது சரமாரி கேள்வி
திமுகவின் மதுவிலக்கு வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கிய தமிழிசை, "நாங்கள் மக்களுக்காக கருப்பு கொடி காட்டி நின்றோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கருப்பு கொடி காட்டினார். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னீர்கள், எங்கே குறைத்தீர்கள்? மக்களை ஏமாற்றி, அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைப்பது உங்களுக்கு மட்டுமே சாத்தியம்," என்று குற்றம்சாட்டினார்.

டாபிக்ஸ்