’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!
”மதுரையில் கால் ஊன்றுகிறார். அது மட்டுமல்ல, அது ஆலமரமாக முளைத்து பசுஞ்சோலையாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்”

வரும் ஜூன் 8ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவால் தமிழக பாஜக ஆலமரம் போல் முளைத்து பசுஞ்சோலையாக மாறும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
சரஸ்வதி எம்எல்ஏ மகள் மறைவுக்கு இரங்கல்
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நயினார் நாகேந்திரன், “அவரது குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறினார்.
பெங்களூரு ஐபிஎல் நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு நயினார் இரங்கல் தெரிவித்தார். இதில் திருப்பூரைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணும் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். “கர்நாடக ஆளுங்கட்சி சரியாக ஏற்பாடு செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியின்போது இதைவிட பெரிய நிகழ்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.