BJP VS DMK: தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை! தலைமைறைவாக இருந்தவர்களை தட்டி தூக்கிய NIA! அரசை விளாசும் ஹெச்.ராஜா!
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தேசிய புலனாய்வு முகமை தானே தவிர தமிழக காவல்துறை அல்ல என ஹெச்.ராஜா ட்வீட்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் 2019ஆம் ஆண்டு ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத், சாகுல் அமீது ஆகியோரை திண்டுக்கலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
என்.ஐ.ஏ தானே தவிர காவல்துறை அல்ல!
இந்த செய்தியை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், மதமாற்றத்தை தட்டிக்கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த திருபுவனம் ராமலிங்கம் அவர்களை படுகொலை செய்த பயங்கரவாதிகளில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரை திண்டுக்கல்லில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தேசிய புலனாய்வு முகமை தானே தவிர தமிழக காவல்துறை அல்ல! இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்ன செய்ய? பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தமிழக முதல்வருக்கு இருந்தால் தானே அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்துறைக்கு அந்த அக்கறையும் பொறுப்புணர்வும், கடமையுணர்ச்சியும் இருக்கும்.
நேரடி கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறை எப்படி இருக்கும்?
தமிழக முதல்வரே திறனற்றவராக வாக்கு வங்கி அரசியலுக்காக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக இருந்தால் அவருடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்துறை எப்படி இருக்கும்? இதுவரை தமிழக காவல்துறை யாரை தீவிரமாக தேடிக்கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது என்று பார்த்தால் ஆளும் திமுகவின் அராஜக, அட்டூழியங்களை ஆட்சி நிர்வாகத்தின் அவலங்களை சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் பதிவிடும் சமூக பொறுப்புணர்வு மிக்க பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களைத்தான்.
தமிழக மக்கள் எண்ணம் நடக்கிறதா?
திருபுவனம் ராமலிங்கம் அவர்களை படுகொலை செய்த குற்றவாளிகளில் தலைமுறைவாக இருக்கும் மீதமுள்ள பயங்கரவாதிகளையாவது கைது செய்து தாங்கள் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானவர்கள் என்பதை தமிழக காவல்துறை நிருபிக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் அனைவரின் எண்ணம் நடக்கிறதா பார்ப்போம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அந்த SIR யார்? என்பதையே கண்டுபிடித்து இதுவரை கைது செய்யாத திமுக அரசா அவர்களுடைய கட்சிக்கு ஆதரவாகவும் அவர்களுடைய ஆட்சிக்கு வாக்கு வங்கியாகவும் இருக்கும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறது?
