சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரையில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா போஸ்கோவில் கைது!
15 வயது சிறுமி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எம்.எஸ்.ஷா மீது சிறுமியின் தந்தை கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரையில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா போஸ்கோவில் கைது!
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பாஜக பொருளாதார பிரிவு மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் தனியார் கல்லூரியின் தலைவராக எம்.எஸ்.ஷா என்பவர் உள்ளார். இவர் பாஜக பொருளாதார பிரிவின் மாநில நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
15 வயது சிறுமி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எம்.எஸ்.ஷா மீது சிறுமியின் தந்தை கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாஜக பொருளாதார பிரிவு நிர்வாகி எம்.எஸ்.ஷா மற்றும் சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.