Fact Check: பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் 1 வாக்கு தான் பெற்றாரா.. எடிட் செய்யப்பட்ட போட்டோ வைரல்
அண்ணாமலை ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு பெற்றதாகக் கூறப்படும் போட்டோ எடிட் செய்யப்பட்டிருப்பதை the quint செய்தித் தளம் கண்டறிந்துள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது கோயம்புத்தூர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டுவதாகக் கூறப்படும் போட்டோ ஒன்று, ஒரு குறிப்பிட்ட சாவடியில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாகப் பகிரப்படுகிறது.
அண்ணாமலை ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு பெற்றதாகக் கூறப்படும் போட்டோ எடிட் செய்யப்பட்டிருப்பதை the quint செய்தித் தளம் கண்டறிந்துள்ளது.
இந்த போஸ்ட் சோஷியல் மீடியாவில் 4.98 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இந்தக் கூற்றுகள் உண்மையா?:
இல்லை, கோவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் அண்ணாமலை ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாகக் காட்டும் வகையில் வைரலான போட்டோ திருத்தப்பட்டுள்ளது. அசல் படத்தில் அவருக்கு சுமார் 101 வாக்குகள் கிடைத்திருந்தது.
கூகுள் லென்ஸ் தேடலைச் செய்து, 'மின்னம்பலம்' என்ற இன்ஸ்டாகிராம் உண்மையான போட்டோ கிடைக்கப் பெற்றது.
பிற ஆதாரங்கள்: WebQoof குழு கூடுதல் தலைகீழ் படத் தேடலைச் செய்தது மற்றும் Sun News இன் அதிகாரப்பூர்வ X தளத்தில் இருந்த போட்டோவையும் கண்டறிந்தோம்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக தலைவர் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளர் கணபதி பி ராஜ்குமாரை எதிர்த்து 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் அண்ணாமலை ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாகப் போட்டோ எடிட் செய்யப்பட்டு, பொய்யாகப் பகிரப்படுகிறது.
லோக்சபா தேர்தல் 2024
18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது.
ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது.
பொறுப்புத்துறப்பு: இந்தச் செய்தி முதலில் the quint-ல் வெளியிடப்பட்டது, மேலும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Tamil இல் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பலம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) (அஜித் பவார்), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அதிமுக (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி மற்றும் பிற முக்கிய கட்சிகள் உள்ளன. மேலும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அப்னாடல் (சோனேலால்), ராஷ்ட்ரிய லோக் தளம், நிஷாத் கட்சி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, ஹரியானா லோகித் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா, பாரத் தர்ம ஜன சேனா, கேரள காமராஜ் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி (Athawale of India) , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா, பிரஹர் ஜனசக்தி கட்சி, ஜன சுராஜ்ய சக்தி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, கோர்கா தேசிய விடுதலை முன்னணி போன்றவை உள்ளன.
டாபிக்ஸ்