தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp Annamalai Condemns Kottai Ameer Award For Zubair

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு மத நல்லிணக்க விருது - அண்ணாமலை கடும் கண்டனம்

Karthikeyan S HT Tamil
Jan 26, 2024 01:36 PM IST

Annamalai: ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில், திமுக, அரசு, ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை எட்டுவதில் தவறவில்லை. குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார்.

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை சிலிண்டர் குண்டுவெடிப்பு என்று அவர்கள் தொடர்ந்து அழைத்த திமுகவினர், இந்த தேர்வு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. உண்மையைச் சரிபார்ப்பவர்கள் என்ற போர்வையில் அரைகுறை உண்மையை பரப்புவர்கள் அவர்கள். மக்களின் வரிப்பணம் வீணாகிறது, ஆனால் திமுக அரசுக்கு அதுகுறித்து என்ன கவலை?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்