விஜய் VS சிவகார்த்திகேயன்: ’ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!’ உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்து பேசும் பிஸ்மி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விஜய் Vs சிவகார்த்திகேயன்: ’ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!’ உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்து பேசும் பிஸ்மி!

விஜய் VS சிவகார்த்திகேயன்: ’ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!’ உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்து பேசும் பிஸ்மி!

Kathiravan V HT Tamil
Published Apr 29, 2025 01:52 PM IST

"ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிட்டால், இங்கு இருக்கிற தியேட்டர்களில் முக்காவாசி தியேட்டர்களை அவங்க புக் பண்ணிருவாங்க. அப்ப விஜயினுடைய ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது"

விஜய் VS சிவகார்த்திகேயன்: ’ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!’ உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்து பேசும் பிஸ்மி!
விஜய் VS சிவகார்த்திகேயன்: ’ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!’ உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்து பேசும் பிஸ்மி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது செல்வாக்கை கட்டுப்படுத்த திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திட்டமிடுவதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி குற்றம்சாட்டி உள்ளார்.

விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் திமுகவின் அச்சம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சமீபத்தில் கோயம்புத்தூரில் நடத்திய பூத் கமிட்டி மாநாடு, பெரும் கூட்டத்தை ஈர்த்து அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதே பகுதியில் ரோட் ஷோ நடத்தி இருந்தார். விஜய்யின் நகர்வுகளை திமுக உன்னிப்பாக கவனிப்பதை உணர்த்துகிறது. "விஜய்யின் கூட்டம் தன்னிச்சையாக சேர்ந்தது, ஆனால் திமுகவின் கூட்டம் திட்டமிட்டு கூட்டப்பட்டது," என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து உள்ளார்.

எம்ஜிஆர், விஜயகாந்த், வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறியதா என்று கேள்வியை சிலர் கேட்டாலும், ஓட்டாக மாறிவிடுமோ என்ற பயமும், பதட்டமும் உள்ளது என்று பிஸ்மி கூறினார். "2026ல் ஸ்டாலின் எதிராக விஜய்யாக இருந்தாலும், எதிர்காலத்தில் உதயநிதி எதிராக விஜய் என்ற காலகட்டம் நிச்சயம் வரும்," என பிஸ்மி குறிப்பிட்டார்.

ஜனநாயகன் vs பராசக்தி

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2026 பொங்கல் வெளியீட்டை பாதிக்கும் வகையில், ரெட் ஜெயன்ட் பராசக்தி படத்தை வெளியிட திட்டமிடுவதாக பிஸ்மி குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகன் படம் தொடங்கப்பட்ட போது, அந்த படத்தின் ரிலீஸ் தேதியாக 2025 அக்டோபரை குறித்து இருந்தார்கள். பின்னர் விஜய்யின் கடைசி படம் என்பதால் பொங்கல் போன்ற விழாக்காலங்களில் வெளியிட வேண்டும் என மாற்றிவிட்டனர் என்று குறிப்பிட்டார்.

"ஜனநாயகன் படம் பகவன் கேசரி அப்படிங்கிற ஒரு தெலுங்கு மசாலா படத்தினுடைய ரீமேக் தான் இந்த படம். ஆனால் 80% தான் அதனுடைய ரீமேக். 20% விஜயனுடைய அரசியலுக்கு ஆதாயம் சேர்க்கிற மாதிரியான விஷயங்களை அள்ளி போட்டு, ஒரு அரசியல் படமாவும் எடுத்து வருகிறார்” என்று கூறினார்.

தவெகவின் தேர்தல் பரப்புரைக்கு வலு சேர்க்கும்

"ஜனவரி மாத வாக்குல இந்த படம் ரிலீஸ் ஆச்சு என்றால் தவெகவின் தேர்தல் பிரச்சார படமாக இருக்கும். அதுல வந்து இவருடைய அரசியல் வசனங்கள், அரசியல் ரீதியான காட்சிகள் இருக்கும்போது, அது பெரிய அளவுல மக்களுக்கு ஒன் டு ஒன் கனெக்ட் ஆகும்" என்றார்.

தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்

ஆனால், ரெட் ஜெயன்ட் நிறுவனம், சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தை அதே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு, முக்காவாசி திரையரங்குகளை முன்பதிவு செய்ய முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஜனநாயகன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பது குறைந்து, அதன் வசூல் சாதனை பாதிக்கப்படலாம் என கூறினார்.

"ரெட் ஜயன்ட் தரப்புல பராசக்தினு இப்ப ஒரு படம் தயாராயிக்கு. சிவகார்த்திகேயன் நடிக்கிறாரு. அது 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய ஒரு படம். சுதா கொங்குரா இயக்கத்துல, ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு நெருக்கமான டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறாங்க. அந்த படத்தினுடைய ரிலீஸ் கரெக்டா 2026 பொங்கல்ங்கிற மாதிரி அவங்க தீர்மானிக்கிறாங்க" என்று கூறினார்.

"ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிட்டால், இங்கு இருக்கிற தியேட்டர்களில் முக்காவாசி தியேட்டர்களை அவங்க புக் பண்ணிருவாங்க. அப்ப விஜயினுடைய ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது. திடீர்னு பராசக்திய உள்ள விட்டு ஒரு 500 தியேட்டர், 600 தியேட்டர் அவங்க எடுத்துட்டு போயிட்டாங்க அப்படின்னா, ஜனநாயகன் படத்துக்கு ஒரு 400 தியேட்டரோ, 500 தியேட்டரோ தான் கிடைக்கும். அப்ப இந்த வசூல் சாதனை சாத்தியமில்லை" என்று பிஸ்மி கூறினார்.