Ban on Bathing in Hogenakkal : ஒகேனக்கல்லில் 6ஆவது நாளாக குளிக்க தடை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ban On Bathing In Hogenakkal : ஒகேனக்கல்லில் 6ஆவது நாளாக குளிக்க தடை!

Ban on Bathing in Hogenakkal : ஒகேனக்கல்லில் 6ஆவது நாளாக குளிக்க தடை!

Divya Sekar HT Tamil
Oct 16, 2022 11:10 AM IST

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.80 லட்சம் கன அடியாக உள்ளதால் 6-வது நாளாக இன்றும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

<p>ஒகேனக்கல்லில் 6ஆவது நாளாக குளிக்க தடை</p>
<p>ஒகேனக்கல்லில் 6ஆவது நாளாக குளிக்க தடை</p>

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 1.80 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளதால் 6ஆவது நாளாக இன்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்து செல்லவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையும் மூடப்பட்டுள்ளது. 

அத்துடன் காவிரி கரையோர பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.