தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Balaru Barrage, Madurai Aiims Trending News For Tamilnadu On September-24

Balaru Barrage: பாலாறு தடுப்பணை,மதுரை எய்ம்ஸ் உள்பட முக்கிய செய்திகள் (செப் 24)

Divya Sekar HT Tamil
Sep 24, 2022 05:22 PM IST

பாலாறு தடுப்பணை,மதுரை எய்ம்ஸ் உள்பட பலவேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற உள்ளதால் வட சென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த மற்றும் நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்; ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும்

என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்,

வண்டலூரில் வனத்துறை சார்பில் பசுமைத் தமிழகம் இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்;

சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். அண்மையில் நீதிமன்ற அவதூறு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை டிஸ்மிஸ் செய்து காவல்துறையின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்?;

பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் தினமும் 1000 புற நோயாளிகளை கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்திருக்கிறது; அதிமுக ஆட்சியில் தவறான முறையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

WhatsApp channel

டாபிக்ஸ்