தலைப்பு செய்திகள்: தமிழகம் வரும் அமித்ஷா முதல் கமலுக்கு 49.67 கோடி கடன் வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: தமிழகம் வரும் அமித்ஷா முதல் கமலுக்கு 49.67 கோடி கடன் வரை!

தலைப்பு செய்திகள்: தமிழகம் வரும் அமித்ஷா முதல் கமலுக்கு 49.67 கோடி கடன் வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 07, 2025 09:54 AM IST

பக்ரீத் கொண்டாட்டம், தமிழகம் வரும் அமித்ஷா, கமலுக்கு 49.67 கோடி கடன், தொகுதி மறுவரையை தொடர்பாக ஸ்டாலின் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: தமிழகம் வரும் அமித்ஷா முதல் கமலுக்கு 49.67 கோடி கடன் வரை!
தலைப்பு செய்திகள்: தமிழகம் வரும் அமித்ஷா முதல் கமலுக்கு 49.67 கோடி கடன் வரை!

1.பக்ரீத் கொண்டாட்டம் 

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். தியாக திருநாளையொட்டி மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

2.கமலுக்கு 49.67 கோடி கடன் 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தகவல். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல் வேட்புமனுவுடன் சொத்து விவரஙளை தாக்கல் செய்து உள்ளார். 

3.தொகுதி மறுவரையரை - மு.க.ஸ்டாலின் கண்டனம் 

மத்திய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையை செயல்படுத்த உள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

4.முதல் குரல் என்னுடையதே - ஈபிஎஸ்

தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால் எதிர்க்கும் குரல் என்னுடையதே என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்.

5.மதுரை வரும் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகை. சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகள் உடன் நாளை ஆலோசிகிறார். 

6.கொரோனா தொற்றால் உயிரிழப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு, இணைநோய் மற்றும் இதய பிரச்னை இருந்ததாக மாவட்ட சுகாதரத்துறை விளக்கம். 

7.முககவசம் அணிய அறிவுரை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கருவுற்ற பெண்கள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல். 

8.திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடுத்த மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறும் என அறிவிப்பு. காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கலங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

9.மெட்ரோ ரயில் சோதனையோட்டம் 

பூந்தமல்லி-போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி. டவுன் லைனில் முதன்முறையாக 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சாதனை.

10.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என தகவல்.