Ayodhya Ram Temple: ’அயோத்தி முதல் அரிச்சல் முனை வரை!’ மோடி வழிபட்ட இடத்தின் சிறப்புகள் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ayodhya Ram Temple: ’அயோத்தி முதல் அரிச்சல் முனை வரை!’ மோடி வழிபட்ட இடத்தின் சிறப்புகள் தெரியுமா?

Ayodhya Ram Temple: ’அயோத்தி முதல் அரிச்சல் முனை வரை!’ மோடி வழிபட்ட இடத்தின் சிறப்புகள் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Jan 21, 2024 11:58 AM IST

”Ayodhya Ram Temple: இந்த அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் பாலம் தொடங்குவதாக ஐதீகம் உள்ளது. ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, ராவணனுக்கு எதிராக இலங்கைக்கு போரை நடத்துவதற்காக 'வானர சேனா' உதவியுடன் ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது”

ராமேஸ்வரத்தில் உள்ள அரிச்சல் முனை பகுதியில் வழிபாடு நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி
ராமேஸ்வரத்தில் உள்ள அரிச்சல் முனை பகுதியில் வழிபாடு நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி (PTI)

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்காக விரதமிருந்து பிரதமர் மோடி தொடர் வழிபாடுகளை நடத்தி வருகிறார்.  

மகாராஷ்டிராவில் உள்ள காலாராம் கோயில், ஆந்திராவில் உள்ள லேபக்‌ஷி கோயில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடு நடத்தி இருந்த பிரதமர் நேற்றைய தினம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தியதுடன், கம்பராமாயண பாராயணத்தை கேட்டறிந்தார். 

பின்னர் ராமேஸ்வரம் சென்ற அவர் அங்குள்ள 21 புனித கிணறுகளில் உள்ள நீரிலும் மற்றும் அக்னி தீர்த்த கடலிலும் நீராடினார்.  மேலும் ராமஸ்வரம் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் வழிபாடு மேற்கொண்டார். 

பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் எளிய முறையில் தங்கிய அவர், இன்று காலை தமிழகத்தின் தென் முனையான அரிச்சல்முனைக்கு சென்று கடற்கரையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் அங்கு 'பிராணாயாமம்' (சுவாசப் பயிற்சி) செய்தார். கடல் நீரைப் பயன்படுத்தி பூஜையும் செய்தார்.

இந்த அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் பாலம் தொடங்குவதாக ஐதீகம் உள்ளது.  ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, ராவணனுக்கு எதிராக இலங்கைக்கு போரை நடத்துவதற்காக 'வானர சேனா' உதவியுடன் ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  பின்னர் அரிச்சல் முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். 

அயோத்தி ராமர் கோயில் சிறப்பம்சங்கள் 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தி வருகிறார். அரசியல், வணிகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய பிரபங்களுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலானது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் கருடன் ஆகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டுள்ளது. நிருத்திய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களை கொண்டுள்ள ராமர் கோவிலின் கருவறையில், குழந்தை ராமர் (ராம் லல்லா) சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.