Avvai Natarajan Memorial Day: தமிழில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய அவ்வை நடராஜன் நினைவு நாள் இன்று
தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக 1975 முதல் 1984 வரை பணியாற்றினார்
அவ்வை நடராஜன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இந்திய அறிஞரும் கல்வியாளரும் ஆவார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவ்வை நடராஜன், தமிழக அரசின் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையில் செயலாளராக இருந்தார்.
தமிழ் இலக்கியத்தில் MLitt மற்றும் முனைவர் பட்டம் (PhD) பெற்றவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (Master of Arts) பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் கொண்டவர்.
மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, டெல்லியில் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலுள்ள காந்தி ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக 1975 முதல் 1984 வரை பணியாற்றினார்
செம்மொழியான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்புவதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட செம்மொழித் தமிழ் மைய நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.
அவர் பல கருத்தரங்குகளில் முக்கிய உரைகளை ஆற்றியுள்ளார் மற்றும் அறம் விருது தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தார்.
நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு வழங்கி நடராஜனைக் கௌரவித்தது.
கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் (1982) தமிழ்நாட்டின் சார்பாகப் பங்கேற்றார்
நடராஜன் தனது 86வது வயதில் 21 நவம்பர் 2022 அன்று சென்னையில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
டாபிக்ஸ்