Top 10 News: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை வரை - டாப் 10 நியூஸ் இதோ!
Top 10 News: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை, யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார் உள்ளிட்ட இன்றைய காலை நேரத்துக்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Tamil Top 10 News: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம், வானிலை அப்டேட் தொடர்பான செய்திகள் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்
உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
முதலமைச்சர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வெறிச்சோடிய சாலைகள்
பொங்கல் விழாவின் தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர் திரும்பியதால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
"UGC NET தேர்வு ஒத்திவைப்பு - சரியான முடிவு"
இனியாவது அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். UGC NET தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக இக்கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில், ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பத்தாவது சர்வதேச பலூன் திருவிழா கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் துவங்கியது.
யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் நடிகருமான நாசர் சார்பில் யூடியூப் சேனல் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் குறித்து அவதூறு பேசியதாக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது நாசர் புகார் கொடுத்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு தகவல்
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தைப்பொங்கல் தினமான இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஜன.14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்