Avadi Nasar : ஷாக்.. முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Avadi Nasar : ஷாக்.. முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!

Avadi Nasar : ஷாக்.. முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!

Divya Sekar HT Tamil
Jul 11, 2023 05:44 PM IST

உடல் நலக்குறைவால் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி நாசர்
ஆவடி நாசர்

 கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர் அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் மாஃபா பாண்டியராஜனை வீழ்த்தி வென்றார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார். நாசர் பதவி ஏற்புக்கு பிறகு ஆவின் பால் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை அதிரடியாக நீக்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. இந்த இரண்டு அமைச்சரவை மாற்றங்களிலுமே அமைச்சர்களுக்கு இலாகா மாற்றங்கள் நடந்துள்ளதே தவிர ஒருவர் கூட அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. தற்போது இதில் முதல் ஆளாக இணைந்துள்ளார் ஆவடி சா.மு.நாசர்.

இதையடுத்து டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாசர் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.