Murder: 3ஆவது ஆணிடம் தொடர்பு - 2வது மனைவி கொலை!
திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது இரண்டாவது மனைவியை ஆட்டோ டிரைவர் கொலை செய்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவி ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் என்ற ஆட்டோ டிரைவர். 48 வயதான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதேஸ்வரன் சேலம் பேருந்து நிலையம் அருகே இருந்த டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது அங்கு உடன் வேலை செய்த ஷெகனாஷ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. ஏற்கனவே ஷெகனாஸ் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்த காரணத்தினால் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
மாதேஸ்வரன் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஷெகானாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிதுடிக்க மாதேஸ்வரன் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மாதேஸ்வரனிடம் காவல்துறையினர் இரண்டாவது மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது காவல்துறையிடம் அவர் பரபரப்பான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
விசாரணையில் மாதேஸ்வரன்," திருமணம் செய்த பிறகு நானும், ஷெகனாசும் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது சில மாதங்களுக்கு முன்பு அவரது நடத்தையில் சில மாற்றங்கள் தெரிந்தன.
இது குறித்து எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து ஷெகனாஷை நான் கண்காணித்து வந்தேன். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் ஷெகனாஷுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து நான் அவரை கண்டித்தேன்.
இருப்பினும் அந்த இளைஞரிடம் அவர் வைத்திருந்த தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து தெரியாமல் பழகி வந்தது எனக்கு தெரிய வந்தது. இது குறித்து நேற்று அவருக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அது தகராறாக மாறியது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த நான், துண்டை எடுத்து ஷெகனாஷின் கழுத்தில் சுற்றி இருக்கிறேன். அப்போது வலியால் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வீட்டிற்கு ஓடி வந்து திரண்டனர்.
இதனை அடுத்து நான் அங்கிருந்து சென்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் அவரது மகள் வீட்டிற்கு சென்று உனது தாயை நான் கொலை செய்து விட்டேன் என தெரிவித்தேன்.
இதனால் அவரது மகள் கதறி அழுதார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். தப்பிக்க முடியாது என்று தெரிந்தவன் இரவு அன்னதானப்பட்டி காவல் துறையினரிடம் சரண் அடைந்து விட்டேன், என இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணை கணவனை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.