தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  August 17 Tamil News Updates

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

August 17 Tamil News Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

12:27 PM ISTKarthikeyan S
• Share on Facebook
12:27 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தில்லியில் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார்.

Wed, 17 Aug 202212:22 PM IST

அபராதம்

பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை

Wed, 17 Aug 202210:20 AM IST

அசைக்க முடியாத எஃகு கோட்டை

அதிமுகவில் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக திகழும், வெற்றி நடைபோடும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Wed, 17 Aug 202208:46 AM IST

7 மாவட்டங்களில் கனமழை

நீலகரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் கனமழை

7 மாவட்டங்களில் கனமழை

Wed, 17 Aug 202208:43 AM IST

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை தமிழக முதல்வர் தில்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Wed, 17 Aug 202207:31 AM IST

"ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். அளித்த தண்டனை"

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அளித்த தண்டனையாகவே பார்க்கிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

புகழேந்தி மற்றும் ஓபிஎஸ்

புகழேந்தி மற்றும் ஓபிஎஸ்

Wed, 17 Aug 202207:25 AM IST

இபிஎஸ் ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இபிஎஸ்

இபிஎஸ்

Wed, 17 Aug 202207:06 AM IST

ஜெயக்குமார் பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது கிடையாது - ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Wed, 17 Aug 202207:02 AM IST

கே.பி.முனுசாமி பேட்டி

நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் அதிமுக இ.பி.எஸ். தலைமையில் இயங்கும். அதற்கான முயற்சிகளை, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் - கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

Wed, 17 Aug 202207:03 AM IST

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல இருக்கிறார்.

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ்

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ்

Wed, 17 Aug 202206:57 AM IST

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

தீர்ப்பு வெளியானதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Wed, 17 Aug 202207:20 AM IST

ஆணையரை நியமிக்க வேண்டும்

ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது; மீண்டும் பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்