’பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது ஏன்?’ ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது ஏன்?’ ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

’பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது ஏன்?’ ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

Kathiravan V HT Tamil
Published Jun 05, 2025 02:45 PM IST

”இது பாஜகவுக்காகவோ அல்லது கட்சி பிரச்சினைகளுக்காகவோ நடந்த சந்திப்பு அல்ல”

’பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது ஏன்?’ ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்
’பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது ஏன்?’ ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

ராமதாஸுடன் மூன்று மணி நேர சந்திப்பு

தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் இன்று காலை 10 மணிக்கு சந்தித்து, மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு முன்பு, காலையில் அன்புமணி ராமதாஸ் தனது மகளுடன் 45 நிமிடங்கள் ராமதாஸை சந்தித்து பேசியிருந்தார்.

சந்திப்பு குறித்து குருமூர்த்தியின் விளக்கம்

சந்திப்பு முடிந்து வெளியே வந்த குருமூர்த்தி, “ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கவே வந்தேன். இது பாஜகவுக்காகவோ அல்லது கட்சி பிரச்சினைகளுக்காகவோ நடந்த சந்திப்பு அல்ல” என்று தெரிவித்தார். “பிரச்சினைகள் இருக்கும் இடங்களுக்கு நான் செல்வதாக கேட்கிறார்கள். ஆனால், நான் செல்லும் இடங்களில்தான் பிரச்சினைகள் வருகின்றன” என்று அவர் புன்னகையுடன் பதிலளித்தார்.

பாமகவில் உட்கட்சி மோதல்: ஒற்றுமைக்கு அழுத்தம்?

பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகவும், இதனால் கட்சி நிர்வாகிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, ஜூன் 8 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவுள்ளதால், அதற்கு முன்பு இருவரையும் ஒற்றுமைப்படுத்த பாஜக அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.