Kilpauk: மருத்துவரைத் தாக்கிய உறவினர்கள் - போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்!
பணியில் இருந்த மருத்துவர் தாக்கிய நோயாளியின் உறவினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அமைந்துள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிறகு இரண்டாம் ஆண்டு முதல்நிலை மருத்துவர் அபிஷேக் என்பவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவர் அபிஷேக் விவரித்துக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது தாக்கப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவரைத் தாக்கிய நோயாளியின் உறவினர்களைக் கண்டித்து மருத்துவமனை பகுதியில் முதுநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாகக் கண்டன செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்," கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் அபிஷேக் என்பவரை அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்களைத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் மருத்துவமனைகள் பாதுகாப்புச் சட்டம் 2008ன் படி தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்படும் கேஎம்சி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் கேரள மாநிலத்திலும் மருத்துவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த வேலையில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோல வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.