Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!

Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!

Kathiravan V HT Tamil
Published Feb 10, 2025 11:21 AM IST

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு செல்லாதது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!
Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஈபிஎஸ்க்கு மாட்டுவண்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது எனக்கு கிடைத்த பாராட்டு அல்ல. விவசாயிகளுக்கு கிடைத்த பாராட்டு. எவ்வளவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். ஆனால் இன்று மன நிறைவுடன் பேசுகிறேன். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டபோது மத்திய அரசு அல்லது வங்கிகளிடம் நிதி பெற்று செய்யலாம் என்றனர். ஆனால் எப்போது பணி முடியும் என்று சொல்ல முடியவில்லை. உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க, நான் மாநில அரசின் நிதியில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டேன். பணிகளை வேகமாக முடிக்க எல்.என்.டி-க்கு பணி வழங்கப்பட்டது. பணி நடைபெற்றபோது கொரோனா பாதிப்பால் தொய்வு ஏற்பட்டது. சுமார் 85% பணிகள் முடிவடைந்தது 15% பணிகள் மீதம் இருந்தன. அடுத்து வந்த திமுக அரசு, அதிமுக அரசின் திட்டம் என்பதால் கிடப்பில் போட்டது. 4 வருடமாக காலம் தாழ்த்தி திட்டத்தை இப்போது திறந்து உள்ளனர் என கூறி இருந்தார். 

கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்:-

இந்த நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு செல்லாதது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை ஏற்பாடு செய்வதவர்கள் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்கள். எங்களை உருவாக்கிய புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப்படங்கள் இல்லை. எங்களிடம் கலந்து இருந்தால் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவேன். டிஜிட்டல் போர்ட் வைத்த பின்னர்தான் எனது கவனத்திற்கு வந்தது. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வர 2011ஆம் ஆண்டு 3.72 கோடி தந்தார்கள். அப்போது பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் அவர்கள் இத்திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவு கொடுத்தார்கள். அவருடைய படங்கள் இல்லை என்று சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை. அங்கே செல்லவில்லையே தவிர, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழுவிடம் நான் இதை சொல்லி உள்ளேன்.” என தெரிவித்து உள்ளார்.