ADMK: அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கு; திண்டுக்கல் ஏஎஸ்பி விசாரிக்க உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கு; திண்டுக்கல் ஏஎஸ்பி விசாரிக்க உத்தரவு

ADMK: அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கு; திண்டுக்கல் ஏஎஸ்பி விசாரிக்க உத்தரவு

Karthikeyan S HT Tamil
Dec 22, 2022 06:08 PM IST

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கை திண்டுக்கல் ஏ.எஸ்.பி. விசாரிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கவுன்சிலர் திருவிக
அதிமுக கவுன்சிலர் திருவிக

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக இருந்த தானேஷ் என்கிற என்.முத்துகுமார் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவிக்கு தேர்தல் நடந்தது.

அதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவியை திமுகவினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்." என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, 19-ந் தேதி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் முடிந்தபின் வாக்குகளை எண்ணலாம். முடிவை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. அன்றைய தினம் காலை 7 மணி அளவில் மனுதாரர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வேடசந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், நீதிமன்றம் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டும் மனுதாரர் தேர்தல் அன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மனுதாரர் விவகாரம் குறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக தரப்பினருக்கு 7 ஓட்டுகளும் அதிமுக தரப்பினருக்கு 4 ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. மனுதாரர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடத்தியவர்களே முடிவை அறிவித்துகொள்ளலாம். மனுதாரர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.