Deer curry cook : மான் கறியை சமைக்க முயன்ற இருவர் கைது- 2 கிலோ மான் கறி பறிமுதல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Deer Curry Cook : மான் கறியை சமைக்க முயன்ற இருவர் கைது- 2 கிலோ மான் கறி பறிமுதல்

Deer curry cook : மான் கறியை சமைக்க முயன்ற இருவர் கைது- 2 கிலோ மான் கறி பறிமுதல்

Divya Sekar HT Tamil
Dec 18, 2022 10:52 AM IST

கொடைக்கானல் குண்டுப்பட்டி கிராமத்தில் மான் கறியை சமைக்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 மான் கறியை சமைக்க முயன்ற இருவர் கைது
மான் கறியை சமைக்க முயன்ற இருவர் கைது

இந்த தகவலின் அடிப்படையில் சென்ற‌ வனத்துறையினர் குண்டுபட்டியில் வசிக்கும் ராமச்சந்திரன் (60) என்பவரின் வீட்டில் சோதனை செய்யும் போது மான் கறி சமையலுக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது,இதனை தொடர்ந்து வனத்துறையினர் மான் கறியை பறிமுதல் செய்து ராமசந்திரன் மற்றும் இவரது கூட்டாளியான இதே கிராமத்தை சேர்ந்த முத்து உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குண்டுபட்டி அருகே வனப்பகுதியை ஓட்டியுள்ள தனது சொந்த நிலத்தில் செந்நாய்கள் மானை வேட்டையாடியதாகவும், இதில் பலத்த காயம் அடைந்த கடமானின் கறியினை எடுத்ததாகவும் அதனை வீட்டில் மறைத்து வைத்து சமைக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட‌மான் வேட்டையாடப்பட்டதா அல்லது மானை செந்நாய்கள் வேட்டையாடிய‌தா, இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தில் வேறு ந‌ப‌ர்க‌ளுக்கு தொட‌ர்பு உள்ள‌தா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோண‌ங்க‌ளில் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சாலையில் உள்ள நீச்சல்குளம் அருகே சாலையை கடக்க முயன்ற மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மானை அந்த வழியாக சென்ற திருமூர்த்தி நகரைச் சேர்ந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகி செந்தில்ராஜ் தனது வீட்டிற்கு எடுத்து வந்து சமைப்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரகசிய தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தில்ராஜ் வீட்டில் மான் கறி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது குறித்து தீவிர விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மான் கறியை அவர் விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது வேட்டையாடினாரா??இவர் தொடர்ச்சியாக இது போல் செய்து வந்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.