தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  'Arrested In Rajiv Gandhi Murder Case And Died In Rajiv Gandhi Hospital' Who Is This Surendraraja Alias Shanthan

Santhan: 'ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழப்பு' யார் இந்த சுரேந்திரராஜா என்கிற சாந்தன்?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 28, 2024 10:35 AM IST

Santhan:

'ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழப்பு' யார் இந்த சுரேந்திரராஜா என்கிற சாந்தன்?
'ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழப்பு' யார் இந்த சுரேந்திரராஜா என்கிற சாந்தன்?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் இலங்கையில் பிறந்து தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான நிலையில் தமிழகத்திலேயே உயிரிழந்த சாந்தன் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

யார் இந்த சாந்தன்

1991ம் ஆண்டு மே 21ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் வந்த அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்திய பிரதமர் மரணம் என்பது உலகத்தையே உலுக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நளினி கைது செய்யப்ட்டார். இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்தான் சாந்தன்.

சுரேந்திர ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் இலங்கையில் பிறந்தவர். சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படியில் ஜூலை 22 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மரண தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில்,

"கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். 

அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு சாந்தன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயம் சுயநினைவு குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பிள்ல இருந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்து சுயநினைவை இழந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் சாந்தனின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்